சீனாவில் 324 மில்லியன் டொலர் ஊழல் வழக்கு: முன்னாள் அரச அதிகாரிக்கு மரண தண்டனை
சீனாவின் நான்ஜிங் நகரின் முன்னாள் மூத்த அரசு அதிகாரியான யாங் யூலின் என்பவருக்கு, பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
1993 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசுப் பதவிகளை வகித்த இவர், திட்டங்களை வழங்குதல், வணிகச் சலுகைகள் மற்றும் நில ஒதுக்கீடு போன்றவற்றுக்காகப் பலரிடமிருந்து சட்டவிரோதமாக சுமார் 2.2 பில்லியன் யுவான் இலஞ்சமாகப் பெற்றுள்ளார் என்று ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்சோ இடைநிலை மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலஞ்சம் வாங்கியது மட்டுமின்றி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி போன்ற குற்றங்களும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் நீண்டகால ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு யாங் யூலின் வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து முழுப் பணத்தையும் மீட்டெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஊழல் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான வழக்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam