அமெரிக்கா - சீனா இடையே முக்கிய ஒப்பந்தம்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு சந்திப்பு
குறித்த பதிவில், "எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி லண்டனில் சீனப் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட், வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் கலந்து கொள்வர்.
இது தொடர்பில் அறிவிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடக்க வேண்டும். இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri