சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos)

Tamils Switzerland World
By DiasA Nov 21, 2023 07:17 PM GMT
Report

சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநில அரசு, அங்கு அமைந்துள்ள நடுவனரசு ஆறே ஆற்றில் சைவநெறிக்கூடம் ஊடாக தமிழர்கள் சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பல வேண்டுகோளுக்கு பின் கடந்த (17. 10. 2023) பேர்ன் ஊராட்சிமன்றம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதனை சாத்தியமாக்க உழைத்த 4 சுவிட்சர்லாந்து நாட்டவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பாளர்களால் நேற்று (20.11.2023) நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து வழங்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கருவறையில் தமிழ் வழிபாட்டினை ஆற்றி நிற்க்கும் தமிழ் கோவில் ஆகும்.

செந்தமிழ் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாட்டுடன் பெண்களையும் அருட்சுனையர்களாக கொண்டுள்ள சீர்திருத்த மீளெழுச்சி சைவத்தினை சைவநெறிக்கூடம் மேற்கொண்டு வருகின்றது.

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

பல்லினப் பல்பண்பாட்டு மக்களுடன் பொதுநலத்திட்டங்கள் முன்னெடுக்கும் சைவநெறிக்கூடம், பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்துச் சடங்குகளையும் தமிழில் ஆற்றிவருகின்றது.

1980 முதல் தமிழர்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புலம்பெயரத் தொடங்கி தற்போது 2023ல் 60000 மேற்பட்ட தமிழர்கள் சுவிசில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் இறந்தபின்னர் ஆற்றப்பட வேண்டிய சமயச்சடங்கிற்கு சைவத்தமிழ் மக்கள் சுவிசில் பல கடினங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடா செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது


குறித்த காலத்தில் ஈமைச்சடங்கினை ஆற்றக்கூடிய சைவசமய குருவினை பெற்றுக்கொள்வதும் நடைமுறையில் தற்போது கடினமாக உள்ளநிலையில் சுவிட்சர்லாந்து இந்து - சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்திடம் இதற்கான தீர்வு பெறுவதற்கு வேண்டுகோளையும் பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

கடந்த கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் பல இறப்புக்கள் சுவிசில் நடக்கும்போது சமயக்குருவினை இறுதிச்சடங்கு நடாத்திவைக்கப்பெறுவதில் பெரும் கடினம் நிலவியது.

அவ்வேளை சைவநெறிக்கூடம் தனது வளத்திற்கு ஏற்ப இறுதிச்சடங்குகளை ஆற்றியிருந்தது. அக்காலத்தில் இறந்தவர்களின் நீறினை (சாம்பலை) நீரில் கரைப்பது மேலும் கடினமாக இருந்தது.

இக்காலத்தில் ஏற்பட்ட பட்டறவின் பயனாக 2022ல் பேர்ன் மாநில அரசிடம் சைவநெறிக்கூடம் சைவ மற்றும் இந்துக்களின் இறுதிச்சடங்கிற்குப்பின்னர் சுவிசில் பேர்ன்நகரில் சாம்பல் கரைக்க அரச ஒப்புதலுக்காக பல சுவிட்சர்லாந்து அதிகாரிகள், சமயத் தலைவர்களை நாடியிருந்தது.

யாழில் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு

யாழில் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரிய பொலிஸார்: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு


இவ்வேண்டுகையினை சைவநெறிக்கூடம் விடுத்தபோது இதற்கு வல்ரெல் கிளொசெர் (முன்னைநாள் பேர்ன் நகரசபை பசுமைத்திட்டத்தலைவர்),  தாவித் லொயிற்வில்லெர் (பேர்ன் மாநில அரசின் சமயவிவகார பணிப்பாளர்), யன் புக்ஸ் (அரசவிஞ்ஞான தொழிற்பாட்டாளர்), அல்பேர்ட் றீடெர் (சமூகப்பணியாளர், பல்சமய இல்லத்தில் முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்) ஆகியோர் தமது அதிகாரங்களைத்தாண்டி தமிழ்மக்களுக்கா உழைத்திருந்தனர்.

முதலில் ஊராட்சி மன்ற, பின்னர் மாநில அரச, நிறைவில் நடுவன் அரச தலைவர்கள், அரசியல்வாதிகளை நேர்கண்டு, சைவத்தமிழர்களின் தேவை விளக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

2 ஆண்டுகளில் பல அதிகாரிகளையும் தலைவர்களையும் நேர்கண்டு, பேர்ன் நகரில் ஆறேநதியில் சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் வழங்க சைவநெறிக்கூடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

பல வேண்டுகோளுக்கு பின் கடந்த 17. 10. 2023 பேர்ன் ஊராட்சிமன்றம், பேர்ன் மாநில அரசு, சுவிட்சர்லாந்து நடுவனரசு ஆறே ஆற்றில் சைவநெறிக்கூடம் ஊடாக சாம்பல் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை சாத்தியமாக்க உழைத்த 4 சுவிட்சர்லாந்து நாட்டவர்களுக்கும் தமிழ்மக்கள் சார்பாளர்களால் நேற்று (20.11.2023) நன்றி நவின்று விருந்துவழங்கப்பட்டது.

விருந்திற்கு முன்னர் ஞானலிங்கேச்சுரர் முன்றலில் தமிழ்ப்பண்பாட்டுப்படி மாலை அணிவித்து நால்வரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட் குறித்து ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் குறித்து ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: வெளியான புதிய அறிவிப்பு


நினைவுப்பரிசாக தமிழர் சிற்றுண்டி அரியதரமும், பயிற்றம்பணியாரமும் அத்துடன் கொக்கோ இனிப்புப்பண்டமும் வழங்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், தூண் பிள்ளையார்கோவில் உறுப்பினர்களும், அக்கினிப்பறவைகள் மன்றத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

அதிகாரிகளையும் சமையத் தலைவர்களையும் வரவேற்று நன்றி நவின்ற திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தனது உரையினை இவ்வாறு ஆற்றினார்:

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தமிழர்கள் 80ம் ஆண்டுமுதல் வருகை தரத்தொடங்கி இருந்தனர். சுவிசில் தமிழ் மக்களுக்கு பலதேவைகள் உள்ளன, நாம் அறவழியில் ஒருவகையில் இன்று அடிப்படை உரிமையினை நிலைநிறுத்தி உள்ளோம்.

மதிப்பளிக்கக்கூடியதாக தமிழர் இறுதிச்சடங்கு ஆற்றப்படவும், இறந்தவரின் சாம்பலை சமய நம்பிக்கைக்கு அமைவாக நீரில் கரைப்பதற்கு ஒப்புதல் அளித்த ஊராட்சி மன்றம், பேர்ன் மாநிலம், சுவிட்சர்லாந்து அரசிற்கு நாம் தமிழ்மக்களின் சார்பாளர்களாக உளமார்ந்த நன்றியினை நவில்கின்றோம் என்றார்.

பச்சைக்காய்கறிக்கலவை முதல் உணவாக வழங்கப்பட்டு, இரவு உணவாக ஈழத்தமிழ் முறையில் சோறும் சைவக்கறிகளும், நிறைவாக மாம்பழக்கலவையும் வழங்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டது. உள்ளத்திற்கும் உரிமைக்கும் நிறைவளிக்கும் நிகழ்வாக இவ்விருந்து அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

சுவிட்சர்லாந்தில் இறந்த இலங்கை தமிழர்கள் சாம்பல் கரைப்பது தொடர்பில் அரசின் முடிவு (Photos) | Agree To Dissolve Ashes Tamils In Switzerland

மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US