இந்தியாவின் ஏவுகணை சோதனையை திரைமறைவில் உற்றுநோக்கும் சீனா
ஏவுகைணை சோதனையொன்றை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், சரியாக குறித்த நேரத்தில் சீனப் போர்க்கப்பல் ஒன்று சோதனை நடத்தப்பட்ட இடத்தை சுற்றி வந்துள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்னி 5 திவ்யாஸ்திரா எனும் ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது.
ஒடிசா கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளதாக இந்தியா அறிவித்த சில நாட்களில், சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் காணப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கப்பல் இந்தியக் கடலோரப் பகுதியின் அருகே சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம்
எம்ஐஆர்வி தொழில்நுட்பம் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் இந்த சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அக்னி 5 எனும் ஏவுகணை எம்ஐஆர்வி தொழில்நுட்பம் மூலம் ஒரே ஏவுகணையில் இருந்து ஆயுதங்களைப் பல திசைகளில் பல்வேறு வேகத்தில் போட முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த சோதனையையே நடந்த போது தான் சீனா ஆராய்ச்சிக் கப்பல் நோட்டமிட்டுள்ளது. இந்தியா இந்த சோதனையை நடத்தும் போது சீனாவின் போர்க்கப்பலான சியான் யாங் ஹோங் 01 இப்போது விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து 260 கடல் மைல்கள் - அதாவது சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதேவேளை அதே இடத்தில் தான் இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் அதிநவீன போலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.