அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கிய எஸ்.பி. திஸாநாயக்க
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுக்கவுள்ளார் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு மீது அவர் ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தார். அவரைச் சமாளிப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் அவர் 30 நாட்கள் மட்டுமே நீடித்தார்.
புதிய அமைச்சரவையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை.
தற்போது அரசை அகற்றுவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு
பின்புலத்திலேயே எஸ்.பி. திஸாநாயக்க தீர்ககமானதொரு அரசியல் முடிவை
எடுக்கவுள்ளார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.