முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகின் ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) கடலில் இந்திய இழுவைப்படகுகள் தற்போது ஆக்கிரிமித்து எங்கள் வழங்களை சூறையாடி செல்வதாக மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளதலைவர் ம.அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவி்க்கையில், முல்லைத்தீவு மாவட்ட கடலில் இந்திய இழுவைப்படகு அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளார்கள்.
தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் கடலில் இருந்து இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பில் காணொளி எடுத்து அனுப்புவதும் தொலைபேசி எடுத்து சொல்வதுமாக காணப்படுகின்றது.
இந்திய இழுவைப்படகுகள்
பகலில் தூரத்தில் நிக்கும் இந்திய இழுவைப்படகுகள் இரவு நேரங்களில் கரையில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்குள் வருகின்றார்கள்.

இந்திய இழுவைப்படகு வருகை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் கடற்தொழில் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்ட கடலில் இப்போது தான் கடற்றொழில் பருவம் அத்தோடு இறால் பிடிக்கும் பருவமும் தொடங்கியுள்ளது.இந்தநிலையில் இந்திய இழுவைப்படகினால் எங்கள் வளமும் தொழிலும் பாதிக்கப்படுகின்றது.
கோரிக்கை
இந்த தொழிலுக்காக எங்கள் கடற்றொழிலாளர்கள் வங்கிகளில் கடனினை எடுத்தும் நகைகளை அடைவு வைத்து செய்துள்ளார்கள். இந்திய இழுவைப்படகுகளால் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று அதிகாலை கடற்தொழில் அமைச்சரிடம் நான் முறையிட்டபோது அவர் இந்தியாவில் நிற்பதாக சொல்லியுள்ளார் தான் கதைப்பதாக சொல்லியுள்ளார்.
இந்திய இழுவைப்படகினை முற்றுமுழுதாக அரசாங்கம் தடைசெய்து தரவேண்டும் என்றும் சம்மேளதலைவர் ம.அலெக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        