யாழ். சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சுழிபுரம் - பெரியபுலோ பகுதியில் வாளுடன் 17 வயது மாணவன் ஒருவனும், சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்றையதினம் (11) யாழ்.நகரில் 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri