சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு வலுசேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் நாளை (31.07.2023) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஊடக அறிக்கை
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள
திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும்,தனியார்
காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03
ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக நாளை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிவரை சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
