இந்தியாவிடமிருந்து மீண்டும் ஒரு பில்லியன் டொலர் கடன்: பேச்சுக்களை ஆரம்பித்தது இலங்கை
இந்தியாவிடமிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை இலங்கை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் மூத்த பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.03.2023) இலங்கை மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடன் தொகையானது இந்திய ரூபாவில் பெறப்படும் என்றும், கடன் தொகையின் பெறுமதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடன் பெறுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்திருக்கும் என்றும், இந்தப்
பணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்குப்
பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam