வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை தொடரப்போவதில்லை - சட்டமா அதிபர் நீதிமன்றங்களுக்கு அறிவிப்பு
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை, தொடரப் போவதில்லை என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளார்.
2008 - 2009 ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போனது தொடர்பாக 2019இல் குற்றப் புலனாய்வுத்துறை, கரன்னாகொடவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது.
இதனையடுத்து அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, 2008 மற்றும் 2009இல் 11 பேரை கடத்தி, சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தமை மற்றும் சதி செய்த வழக்கில் கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தீர்மானித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாக முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று காரனாகொடவுக்கு எதிரான வழக்கை தொடரப் போவதில்லை என்று தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 16 மணி நேரம் முன்
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் நான்காவது நடிகை.. 8 ஆண்டுகளுக்கு பின் நடிக்க வருகிறார்? Cineulagam