செங்கடலில் ஹவுதி - அமெரிக்க படைகள் இடையே பாரிய மோதல்
செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படகுகளை அமெரிக்க பாதுகாப்பு படை உலங்கு வானூர்திகள் அழித்துள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை சிவப்பு கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சிங்கப்பூரின் கொடியேந்தி சென்ற சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Iranian-backed Houthi small boats attack merchant vessel and U.S. Navy helicopters in Southern Red Sea
— U.S. Central Command (@CENTCOM) December 31, 2023
On Dec. 31 at 6:30am (Sanaa time) the container ship MAERSK HANGZHOU issued a second distress call in less than 24 hours reporting being under attack by four Iranian-backed… pic.twitter.com/pj8NAzjbVF
ஹவுதி படையினருடன் மோதல்
இதன் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று வந்த அமெரிக்க உலங்கு வானூர்திகள் மற்றும் கப்பல் பாதுகாப்பு படைகள், ஹவுதி படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஹவுதி படையினருடன் நடந்த சண்டையின் போது ஹவுதி படையினரின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டனர், அத்துடன் இதில் 10 பேர் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த மோதலில் 3 படகு நீரில் மூழ்கியதாகவும் 10 பேர் மரணித்ததாகவும் அமெரிக்க படைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |