வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தேர்தல் நடத்தப்படாது - தேசிய மக்கள் சக்தி
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தேர்தல் நடத்தப்படாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சர சுரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கினிகத்தேன பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்திய யுத்தம் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 30 தார் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் கையிருப்பில் காணப்படும் தாரை பயன்படுத்தி வீதி அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முன்னதாக மத்திய மாகாண அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டது எனவும் தற்போதைய அரசாங்கம் அதனை 13000 மில்லியன் ரூபாவாக உயர்த்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் குறித்த தொகை 55000 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் எந்தத் தரப்பின் வசம் இருந்தாலும் கட்சி பேதம் பாராது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மஞ்சுல சுரவீர தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri