ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று(3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
6.3 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ள நிலையில்அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதுடன் 60ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது.
கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam