ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஸ்க் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எண்ணெய் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டள்ளன.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று (17.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
சம்பவத்தின்போது ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்குப் பயணித்த உந்துருளி, எரிபொருள் வாகனம் மற்றும் பேருந்து ஆகியவை காந்தஹார் - ஹேராத் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் மீது மோதிய பின்னர் பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் பயணித்த எண்ணெய் வாகனம் மீது மோதியுள்ள நிலையில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹெல்மண்ட் மாநில பொலிஸ் தலைமைப் பேச்சாளர் ஹசதுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri