இந்திய கடற்றொழிலாளர்கள் 21 பேருக்கு விளக்கமறியல்
எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையே இன்று (17.03.2024) அதிகாலை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிவான் உத்தரவு
இதன்போது இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 கடற்றொழிலாளர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan