ஹலால் உணவை தாமே தயாரித்து உட்கொண்ட ஆப்கானிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்
ஆப்கானிஸ்தான் (Afghanistan) கிரிக்கெட் அணி மேற்கிந்திய பார்படாஸில் (Barbados) ஒரு வினோதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த கிரிக்கெட் அணியினருக்கு ஹலால் உணவு கிடைக்காமை காரணமாக, வீரர்கள், தங்கள் உணவைத் தாங்களே சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது இந்திய அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான மோதலுக்கான அவர்களின் தயார் நிலைகளை தடுப்பதற்காக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்திய அணி
மேலும், ஆப்கானிஸ்தானிய வீரர்கள் நகரத்தில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து பொருட்களை பெற்று ஹலால் உணவை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அந்த அணி விளையாடிய செயின்ட் லூசியாவில் (St Lucia) அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
