ஆப்கானிஸ்தானில் புதிய தடை விதித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
இது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள ஆப்கானிஸ்தானிய பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய நலன்களுக்கு அனைத்து ஆப்கானியர்களும் தங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஆப்கானி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னா், சர்வதேச நிதியுதவி திரும்பப்பெறப்பட்டதால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலா்களே ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன..
பாகிஸ்தான் போன்ற ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் எல்லையில் உள்ள வர்த்தகப் பகுதிகளுக்கும் டொலா்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் இஸ்லாமிய அமீரகத்தின், அனைத்து குடிமக்கள்,வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இனிமேல் ஆப்கானிஸ் அனைத்து பரிவர்த்தனைகளை நடத்த மற்றும் வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹிட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.