பாதிக்கப்பட்டுள்ள மலையக தொடருந்து சேவைகள்
டிக்கிரிமெனிக்கே புகையிரதம் தடம் புரள்வுக்கு உட்பட்டுள்ளதால் மலையக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி நேற்று (15) புறப்பட்டு வந்த தொடருந்து தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
திணைக்களத்தின் ஊழியர்கள்
இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோககி வரும் தொடருந்துகள் ஹட்டன் புகையிரத நிலையம் வரையும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் தொடருந்துகள் நானுஓயா வரையும் மட்டுப்படுத்தப்பட்டு பஸ் ஊடாக பயணிகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொடருந்துதினை தண்டவாளத்தில் அமர்த்தும் பணிகள் தொடருந்து திணைக்களத்தின் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்ற போதிலும் இன்று காலை வரை வழமைக்கு திரும்பவில்லை.
இதனால் தொடருந்து பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |