கோவிட் காலத்தில் எடுத்த பிழையான தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டம்
பைசர் (Pfizer) தடுப்பூசிகளினால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட் (Covid) பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிதால் அரசாங்கத்திற்கு இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உரிய முகாமைத்துவம் இன்றி, மித மிஞ்சிய அளவில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்ட காரணத்தினால் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட தடுப்பூசிகள்
இந்த விடயத்தை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் குறித்த மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதவி வகித்த காலத்தில் இலவசமாக கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை கவனத்திற்கொள்ளாது பணம் கொடுத்து தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அண்மையில் சுமார் 75 இலட்சம் காலாவதியாகிய பைசர் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
