அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது: ஹரினி அமரசூரிய
அரசாங்கத்தினால் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை
தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும், ஆர்வத்தையும் மலினப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு தரப்பினரைக் கொண்டு பல்வேறு கருத்துக்களை சமூகத்தில் பரப்ப முயற்சிப்பதாகத் கூறியுள்ளார்.
அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயமாக தெரிந்த காரணத்தினால் அரசாங்கம் மக்கள் ஆணையை மலினப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட நாள் ஒன்றில் கட்டாயமாக நடத்த வேண்டுமென கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |