கொவிட் வைரஸிடமிருந்து தப்ப சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள ஆலோசனை
கொவிட் தொற்றில் இருந்து மீள்வதற்கு தினசரி ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காடியுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ரணில் ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களும் சீரான உணவைப் பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மேலதிகமாக தினசரி ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது அவசியம்.
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த நோயாளிகளுக்கு நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மருந்தை போன்று உணவும் மிக முக்கிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam