எரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
அண்மைய அரசியல் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது, எரிபொருள் விநியோக பிரச்சினை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் பிரச்சினையாக மாறி வருகிறது. இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சு பொறுப்புக்களில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்று ஊடகம் ஒன்று ஆலோசனை தெரிவித்துள்ளது.
எரிபொருள் இன்மை
மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு தான் அறிமுகப்படுத்திய கியூ.ஆர்
குறியீட்டு முறையானது முதலில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய
பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
பெருமை கொள்கிறார்
எனினும் அவர் கூறுகின்ற கியூ.ஆர் குறியீடுகள் கிடைக்கின்ற போதும், குறிப்பிட்ட திகதிகளில் எரிபொருள் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. எரிபொருள் கிடைக்கவில்லை என்றால், கியூ.ஆர் குறியீடுகள் எதற்காக உதவ போகின்றன.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
எனவே சர்வகட்சி அரசாங்கத்தை திட்டமிடும் ஜனாதிபதி விக்ரமசிங்க, பிரச்சினைகளை அறிந்த அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
இல்லையெனில், மக்கள் மீதான கஷ்டங்கள் அரசாங்கத்தின் மீது மேலும் வெறுப்பை வளர்க்கும். புதியவர்கள் பெரிய திட்டங்களுடன் விளையாடி பொருளாதாரத்தில் மேலும் சுமைகளைச் சேர்க்கும் நேரம் இதுவல்ல.
சட்டம் ஒழுங்கை பேணுவதற்கான அவர்களின் முதன்மை பொறுப்பின் இழப்பில் கியூ.ஆர்
அமைப்பு உள்ளிட்ட எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தொடர்ந்து
செயல்படுத்துமாறு பொலிஸாரை கோருவதற்கும் இது நேரமல்ல.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.