போராட்ட களத்திற்கு சென்ற பிரபல பாடகர் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரை
பிரபல பாடகர் சங்கீத் விஜேசூரிய காலிமுகத் திடலில் நடைபெறும் மக்கள் போராட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டு இளைஞர்களுக்கு அறிவுரை கூறியதுடன் பாடல் ஒன்றையும் பாடி மகிழ்வித்துள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
"உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கின்றேன். நான் நீண்டகாலம் கண்ட கனவு நனவாகியுள்ளது. நீங்கள் ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி இருப்பது தொடர்பில் கூற வார்த்தைகள் இல்லை, மிகவும் நன்றி. நாங்கள் உங்களுடன் கடன்பட்டுள்ளோம்.
அரசாங்கம் எமது பயணத்தை மாற்ற திட்டங்களை வகுத்து வருகின்றது. நீங்கள் அமைதியாக செயற்படுங்கள் வன்முறை பக்கம் சென்று விட வேண்டாம். இராணுவத்தினர், பொலிஸாரையும் நாம் பாதுகாக்க வேண்டும். வன்முறை பற்றி எண்ணிக் கூட பார்க்க வேண்டாம்.
இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த அதனையே பயன்படுத்துவார்கள். இதனால், அதில் சிக்கிக்கொள்ள வேண்டாம்" என சங்கீத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகவும் பிரபலமான சிங்கள பாடல் ஒன்றையும் அவர் பாடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மகிழ்வித்தார்.