புத்தாண்டு தினத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளோருக்கான அறிவித்தல்
புத்தாண்டு தினத்தில் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இன்று காலை புத்தாண்டு ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும் வரை பேருந்து சேவை மிகவும் கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேவையின் அடிப்படையில் இயக்கப்படும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மாத்திரம் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
25 அல்லது 30 பேருந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகுளை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.



