மனித இம்யூனோகுளோபுலின் மோசடி: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மனித இம்யூனோகுளோபுலின் மோசடியில் ஈடுபட்ட சர்ச்சைக்குரிய ஆலையை இரண்டாவது நாளாக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது பல கணினிகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளை மேலும் காவலில் எடுப்பதற்கு முன், வளாகம் முழுவதும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
மோசடி
முன்னதாக மோசடியின் உரிமையாளரும் முதல் சந்தேகநபருமான சுதத் ஜானக பெர்னாண்டோ கடந்த 8ஆம் திகதியன்று அதிகாரிகளுடன் ஒத்துழைக்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில்,இரண்டாவது நாளாக நேற்று அவரும் ஆலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் ஆலையில் உள்ள பிரதான மின்சார ஆளியை காட்டி ஒத்துழைக்காததால், முதல் விஜயம் தோல்வியடைந்திருந்தது.
எனவே நேற்று அழைத்து செல்லப்பட்ட மின்சார சபையின் பொறியாளர்கள் தொழிற்சாலை வளாகத்தை பிரதான மின்சார விநியோகத்துடன் இணைத்துள்ளனர்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில் அடையாளம் தெரியாத திரவ மருந்தின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
அத்துடன் பிரதான சந்தேகநபரான சுதத் ஜானக பெர்னாண்டோவின் ஆலை அலுவலகத்தில் இருந்த 7 கணனிகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தேடுதல் நடவடிக்கை நீடித்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.