விபத்தில் சிக்கியவரின் முழங்காலுக்கு கீழான பகுதி அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி (Photos)
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டை எனும் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவரின் காலொன்று சிதைவடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்டவரின் காலொன்றின் முழங்காலுக்குக் கீழான பகுதி அகற்றப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவர் தம்பட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா விஜயதாஸ் என தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
விபத்தை ஏற்படுத்திய வாகன பேருந்து சாரதி வாகனத்துடன் அக்கரைப்பற்று பொலிஸில் சரண் அடைந்துள்ள நிலையில் அவரை திருக்கோவில் பொலிஸாரிடம் அக்கரைப்பற்று பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இதேநேரம் விபத்தில் சிக்கியவரைத் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தின் உதவியுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாகன சாரதிகளின் கவலையீனமாக தற்காலத்தில் விபத்துக்கள் அதிகரித்து
வருகின்றமை கவலை அளிப்பதுடன் இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

