11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

Sri Lanka Magistrate Court Sri Lanka Navy
By Kamal Jun 10, 2026 04:55 PM GMT
Report

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீண்டும் ஒருமுறை சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து, சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னரும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார் | Admiral Ravindra Named As Suspect In Case

எனினும், 2024 ஜனவரி 03ஆம் திகதி அப்போதைய சட்டமா அதிபராக இருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மற்றும் சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததன் பின்னர், அவரை மீண்டும் சந்தேகநபராக பெயரிட குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவும் இவரை சந்தேகநபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

2008ஆம் ஆண்டில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அவர்களைத் தடுத்து வைத்து கப்பம் பெற முயன்றமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் 'நேவி சம்பத்' என்பவருக்கு தலைமறைவாக இருப்பதற்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கும் ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழேயே முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2015 முதல் 2017 வரை கடற்படை தளபதியாக பதவி வகித்த ரவீந்திர விஜேகுணரத்ன, 2017 முதல் 2020 வரை முப்படைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியாகவும் கடமையாற்றியிருந்தார்.

இந்த வழக்கில் ஏனைய சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, 'நேவி சம்பத்' மறைந்திருந்த பொல்வத்தை பகுதியை பொறுப்பாக கவனித்த லக்சிரி அமரசிங்க மற்றும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

கப்பம் பெறுவதற்காக இளைஞர்களைக் கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு தஞ்சம் அளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இழுபறியிலுள்ள இந்த சர்ச்சைக்கரிய வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது.   

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US