ஆதித்யா எல்-1 தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்
ஆதித்யா எல்-1 தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் ஶ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 இலட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
ஆதித்யா எல்-1
ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட தகவல்
ஆதித்யா எல்1 விண்கலமானது தனது திட்டத்தின்படி, "டிராஜக்டரி கரெக்ஷன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) என்ற வழிமுறையை நேற்று முன் தினம் 16 நொடிகளில் செய்து முடித்துள்ளது.
மேலும் இனி வரும் வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
