இணையத்தாக்குதல் மூலம் முன்னணி நிறுவனத்தின் நுகர்வோர் தொடர்புகள் திருட்டு!
இணையத்தாக்குல் மூலம், தமது நுகர்வோர் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாக, விளையாட்டு ஆடைகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான எடிடாஸ்(Adidas) அறிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் வழியாக, அங்கீகரிக்கப்படாத ஒரு தரப்பினர், இந்த இணையத்திருட்டில் ஈடுபட்டதாக எடிடாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
இணையத்திருட்டு
முதன்மையாக தமது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புகளும் இதன்போது திருடப்பட்டுள்ளதாக எடிடாஸ் குறிப்பிட்டுள்ளது.

எனினும்,கடவுச்சொற்கள், கடன் அட்டை எண்கள் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான விபரங்கள் போன்ற முக்கியமான தரவுகள், தாக்குதலின் போது பாதிக்கப்படவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நுகர்வோருக்கு எடிடாஸ் தகவல் தெரிவித்து வருகிறது. அத்துடன் நுகர்வோருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால், அதற்காக வருந்துவதாகவும் எடிடாஸ் தெரிவித்துள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan