கிளிநொச்சியில் பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற்செய்கை
கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இந்த ஆண்டு சிறுபோக நெற்செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட அளவுகளின் படி புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள 1,707 ஏக்கர் நீர்வரி காணிகளில் 530 ஏக்கர் காணி தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த பிரதேசத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து மாவட்ட பயிர்ச்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலும் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக செய்கை
குறித்த பிரதேசத்தில் கமக்கார அமைப்புகளின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் அவர்களோடு சேர்ந்து செயற்படுபவர்களும் இந்த பயிர்செய்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் தனிப்பட்ட விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த பிரதேசத்தில் மூன்று ஏக்கருக்கும் குறைவான அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பில் வாழ்வாதார பயிர்செய்கை மேற்கொண்ட 22 பேரின் காணிகளில் மொத்தமாக 30 ஏக்கர் நிலப்பரப்பை மேலதிக செய்கையாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் சட்டவிரோத பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட குறித்த நிலப்பரப்புகளை மூடி மறைத்து மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோதச் செய்கைகளுக்கு குறித்த கமக்கார அமைப்பினால் அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |