யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல்
யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை (Black July) நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் (Jaffna) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் நேற்று (28.07.2024) மாலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, படுகொலை செய்யப்படவர்களுக்கு மதத் தலைவர்களால் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் பங்குபற்றியோர்
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், மதத்தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.பி சந்திரகுமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |