அமெரிக்காவின் குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டம்
அதானி குற்றச்சாட்டு தமது குழுமத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 55 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக , இந்தியாவின் அதானி குழுமம் அறிவித்துள்ளது.
எனினும் தமது நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அதானி குழுமம் மறுத்துள்ளது.
அமெரிக்காவின் நீதித்துறை அதானி குழுமம் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, தமது பட்டியலிடப்பட்ட 11 நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் 55 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள்
இந்தநிலையில், தம்மீதான குற்றச்சாட்டுக்கள், சர்வதேச முதலீட்டாளர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாக அந்த குழுமம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி தமது சூரியசக்தி மின்சாரத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிதாக வெளியிடப்பட்ட அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |