தென்னிந்தியாவில் புதிய தளம் : இலங்கைக்கு சீமெந்தை அனுப்பும் இந்திய அதானி குழுமம்
இந்திய சிமெண்ட் உற்பத்தியில் பெரும் சக்தியாக மாறி வரும் அதானி குழுமம், ஆரம்பத்தில் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றை கொள்வனவு செய்து அந்த துறைக்குள் பிரவேசித்தது.
இந்தநிலையில் தற்போது தென்னிந்தியாவில் உள்ள பல சீமெந்து நிறுவனங்களை வாங்கி தனது துறையை விரிவாக்கம் செய்து வருகிறது.
அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டை 10,422 கோடிக்கு கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அத்துடன் அடுத்தடுத்து தென்னிந்தியாவில் 4 சீமெந்து உற்பத்தி நிறுவனங்களை வாங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் முக்கியமாகக் கடல் வழியாக இலங்கைக்கு சீமெந்தை அனுப்பும் புதிய வழியும் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளது.
அத்துடன் கொல்கத்தா, கோபால்பூர், காரைக்கால், கொச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இருக்கும் மிகப்பெரிய சிமெண்ட் முனையங்களுடன் அதானி சிமெண்ட்ஸ் இணைந்து கடல் போக்குவரத்தை வலுப்படுத்தும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |