யாழில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அக்குபஞ்சர் சிகிச்சை விவகாரம்: ஜனாதிபதிக்கு செல்லவுள்ள முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனது சுரபி அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும் , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
''எமது சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சத்திர சிகிச்சை
அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்காததால் , அவரின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சத்திர சிகிச்சை செய்துள்ளார்கள்.
அதற்கான ஆதாரங்களை உயிரிழந்தவரின் மனைவி என்னிடம் சமர்ப்பித்துள்ளார். சுயநினைவுடன் , நடமாட கூடிய நிலையில் இருந்தவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாகவே உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்த நபர் , என்னிடம் சிகிச்சை பெற்றதால் தான் உயிரிழந்தார் என ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
எமது சிகிச்சை நிலையத்தை தொழிற்படாது செய்வதற்கான சதி நடவடிக்கையாகவே நான் இதனை பார்க்கிறேன். எ
ங்களின் சிகிச்சை நிலையத்தில் அவர் உயிரிழக்கவில்லை. எங்களின் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
அவற்றை உரிய சுகாதார முறைப்படியே கையாள்கிறோம். அவ்வாறு இருக்க காய்ச்சல் வந்த ஒருவருக்கு எமது சிகிச்சையால் தான் காய்ச்சல் வந்தது என கூறுகின்றார்கள்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |