விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி : அண்டை நாட்டில் சம்பவம்
மும்பையில்(Mumbai) இருந்து வாரணாசி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் நின்று கொண்டு பயணித்த பயணி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(21.05.2024) இடம்பெற்றுள்ளது
இந்நிலையில் விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமானத்தின் பின்புறத்தில் ஆசன முன்பதிவு செய்த பயணி ஒருவர் நிற்பதை கண்டதும் பணியாளர்கள் விமானிக்கு தகவல் அளித்துள்ளனர்.
தொழில்நுட்ப பிரச்சினை
இதனையடுத்து விமானம் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டதோடு, விமானம் ஒரு மணித்தியால தாமதத்துக்கு பின்னர் பயணத்தை தொடர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று கூறி இன்டிக்கோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |