கொழும்பில் நள்ளிரவில் திடீர் சுற்றிவளைப்பு - வெளிநாட்டு பெண்கள் பலர் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட விடுதியை நேற்று இரவு பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு பெண்கள் பலர் கைது
ஜா-எல பகுதியை சேர்ந்த 58 வயதான நபரே முகாமையாளராக செயற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான பெண்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.