சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நடாஷா
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய மற்றும் 'SL VLOG' யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உத்தரவை இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கம்
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி, நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பௌத்த மதம் குறித்து கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரியவை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், நடாஷா எதிரிசூரிய கூறியதாகக் கூறப்படும் கூற்று, முகநூலில் ICCPR இன் பிரிவு 3(1) இன் கீழ் வராது என தெரிவித்திருந்த நிலையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam