சுகாதாரத்துறையினரின் அறிவுரைக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறுகின்றது! அரசாங்கம் அறிவிப்பு
கொரோனா தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் இறுதியாத்திரைக் கூட சுகாதாரத்துறையினரின் அறிவுரைக்கு அமையவே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கே மேற்கொள்ளப்படுவதை, கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் உணரவேண்டும் என்றும் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பரவல் விடயத்தில் அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam