வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு விலைகளில் சில போலி வர்த்தகர்களும், ஆலை உரிமையாளர்களும் அரிசி விற்பனை செய்து வருவதோடு, அரிசியை மறைத்து வைத்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பச்சை அரிசி, நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா அரிசி ஆகியவற்றுக்காக இப்போது உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரிசி பற்றாக்குறை
இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 500 பேருக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri