வவுனியாவில் மழை காரணமாக பாதிப்படைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் காற்று என்பவற்றினால் பாதிப்படைந்த 21 வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது காற்றும் வீசி வருகின்றது.
இதனால் குளத்து நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் சில தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காற்று காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம், இராசேந்திரகுளம், விக்ஸ்காடு ஆகிய பகுதிகளில் 15 வீடுகளும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் சூடுவெந்தபுலவு பகுதியில் 6 வீடுகளும் ஆக 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், 21
வீடுகளுக்கும் துரிதமாக இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.





பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
