மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக புதிதாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்தார்.
மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்காக பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் கர்ப்பலா பொலிஸ் நிலையமுமாக 4 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இந்த அனுமதியையடுத்து அந்த பகுதிக்கு உதவி பொலிஸ்மா அதிபர்,சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் சென்று இடங்களை பார்வையிட்டு, அந்த பகுதிகளில் பொலிஸ்
நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொலிஸ் பிரிவு எல்லைகள்
தீர்மானிக்கப்பட்டு அதற்கான சகல நடவடிக்கைககளும் எடுக்கப்பட்டு தற்காலிகமாக
கடமைகள் இயங்க ஆரம்பித்துள்ளதுடன், இந்த மாதக் கடைசியில் சம்பிரதாயபூர்வமாக
பொலிஸ் நிலையம் திறப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri