கிண்ணியாவில் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சூழ்நிலை காரணமாக, கோவிட் பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று லுகர் தொழுகையுடன் அனைத்து பள்ளிவாசல்களின் கதவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன், அதான் சொல்லுவதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிண்ணியாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri