இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்கு தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் நாடாளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகைமொழியிலான உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
