ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு முக்கிய அறிவித்தல்
ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கையை, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆரம்பித்துள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அறவிடப்படவேண்டிய நிலுவைக் கட்டணம் 7.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நீர்விநியோகத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
