சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறியவர்களுக்கு எச்சரிக்கை
ஆயுதப் பயிற்சி பெற்ற பின் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறியவர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்ய நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆயுதப் பயிற்சி பெற்றதன் பின் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிவருவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்கள், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுடன் தொடர்புகொள்ளும் போக்கு அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
