பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 40000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முகாமையாளர் மற்றும் உணவு கையாளுபவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த வழக்கு நேற்று விசாரணையின் பின் (2025.08.22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 40000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மேலும், பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில் மீன்வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு 5000 தண்டப்பணமும் அறவிடப்பட்டது.
வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் பல குற்றச்சாட்டுகளிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்று விசாரணையின் பின் (2025.08.22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு 25000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
