இலங்கையின் அதிரடி நடவடிக்கை! சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலகச் சந்தை விலைகள் எவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளன என்பதை அறிக்கை காட்டுகிறது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒமிக்ரோன் மாறுபாடு தீவிரமடைந்துள்ளமையினால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் கோரிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச சந்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மிகப்பெரிய அளவு உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இவ்வாறான நிலையில் இலங்கையில் எரிபொருள் விலைகள் பாரிய அளவு அதிகரிப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி உலக செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
