கண்டாவளை பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக நடவடிக்கை
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கனகராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று (09) இராணுவ அதிகாரிகள் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டதுடன், தொடர்ந்து இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆறு மற்றும் புளியம்பொக்கணை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகச் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ராணுவத்தின் உதவியுடன் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன.
தற்போது கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கனகராயன் ஆற்றுப் பகுதியிலும் அதனை அன்மித்த பகுதிகளிலும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து குறித்த மணல் அகழ்வு நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ .பிருந்தாகரன் மற்றும் அந்தப் பகுதிக்கு பொறுப்பாகவுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று (09)பிற்பகல் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இராணுவ காவலரண்களை அமைத்து மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் 20 அடி ஆழத்திற்கும் மேலாகச் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
