மன்னார் வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகள் மீட்பு
மன்னார் - பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அங்கர் பால்மா வை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையத்திலிருந்து நேற்று மாலை ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுமி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam