துபாய்க்கு வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
துபாயிலிருந்து மேலும் 09 இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததன் காரணமாகவே அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்
குறித்த சேதங்கள், ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் துபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்நாட்டில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இவர்கள், தொழில் நோக்கில் துபாய்க்குச் சென்ற இலங்கையர்கள் எனவும் கூறப்படுகிறது.
அதே குற்றச்சாட்டின் பேரில், அதாவது அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காணொளிகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகக் கூறி, துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 26 இலங்கையர்கள், ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.